திருவான்மியூர், மண்ணடி கோவில்களில் கொடியேற்றம்
ADDED :4265 days ago
சென்னை: சென்னை, திருவான்மியூர், மண்ணடி, பாரிமுனை, மேற்கு மாம்பலத்தில் உள்ள சிவன் கோவில்களில், பங்குனிப் பெருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
பங்குனிப் பெருவிழாவிற்காக, திருவான்மியூர் மருந்தீசுவரர், சென்னை பாரிமுனையில் உள்ள சென்னமல்லீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், மண்ணடி மல்லிகேஸ்வரர், மேற்குமாம்பலம் காசி விஸ்வநாதர் கோவில்களில், நேற்று கொடியேற்றம் நடைபெற்றது.திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில், நேற்று இரவு கொடியேற்றம் நடந்தது. அதைத் தொடர்ந்து, தியாகராஜர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர்.சென்ன மல்லீஸ்வரர் கோவிலில் நேற்று, மல்லீஸ்வரர் வீதியுலா வந்தார். மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு, கொடியேற்றம் நடந்தது. அதை தொடர்ந்து, 9:00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடும், மாலை, மாவடி சேவையும் நடைபெற்றது.