உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூரணாங்குப்பம் கோவில் மயானக்கொள்ளை விழா:

பூரணாங்குப்பம் கோவில் மயானக்கொள்ளை விழா:

கிருமாம்பாக்கம்: பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா நேற்று நடந்தது.புதுச்சேரி அடுத்த பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி கோயிலில் கடந்த மாதம்  27-ம் தேதி மயான கொள்ளை உற்சவத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக , ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு ரணகளிப்பு நிகழ்ச்சி நடந்தது.

முக்கிய விழாவான நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. விழாவில் பூரணாங்குப்பம் தவளக்குப்பம், சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் , மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !