கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர விழா
ADDED :4266 days ago
விருத்தாசலம்: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர கொடியேற்று விழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது.வரும் 16--ம் தேதி, 10 நாள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். 16--ம் தேதி பங்குனி உத்திர விழாவில் மணிமுத்தாற்றிலிருந்து காவடி எடுத்தல், சுவாமி வீதியுலா ஆகியவை நடைபெறும். அன்று மாலை தீர்த்தவாரி மற்றும் கொடி இறக்கம் ஆகியவை நடைபெறும்.