நந்தீஸ்வரருக்கு ஆறாட்டு விழா
ADDED :4336 days ago
குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில் திருவிழா பிப்.27ம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான நேற்று நந்தியாற்றில் ஆறாட்டு விழா நடந்தது.
முன்னதாக சுவாமி யானை மீது பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பவனி ,கோவிலிலிருந்து குலசேகரம், ஆரணிவிளை, தும்பகோடு, அச்சாளீஸ்வரம் பகுதி வழியாக வந்தது. அப்போது பக்தர்கள் தங்கள் வீடுகளின் முன் விளக்கேற்றி வழிபட்டனர்.