பகவதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா
ADDED :4266 days ago
கூடலூர்:கூடலூர் முளப்பள்ளி பகவதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா சிறப்பாக நடந்தது.கூடலூர் தொரப்பள்ளி அருகே, முதுமலையை ஒட்டிய முளப்பள்ளி பகவதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த 5ம் தேதி துவங்கியது. காலை 7:00 மணிக்கு கொடி@யற்றம் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தீபாராதனை, பகவதி சேவை, இரவு அத்தாழ பூஜை நடந்தன.6ம் தேதி சிறப்பு வழிப்பாடு, பறை ஊர்வலம் நடந்தன. பகல் 12:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு குனியல் பாலத்திலிருந்து அம்மன் குடம் மேளதாளத்துடன், குழந்தைகள் பெண்கள் விளக்கு ஏந்தியபடி, அம்மன் ஊர்வலம் ஊர்வலம் நடந்தது.இரவு 9:00 மணிக்கு அத்தாழ பூஜைகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி
செய்திருந்தது.