உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

சோளீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

பேரம்பாக்கம்: பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவிலில் நேற்று பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயிலில்  நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், மாலை சந்திரபிரபை திருவீதி உலாவும் நடந்தன.இன்று காலை கோவில் வளாகத்தில் கேடய உற்சவ பூத வாகன சேவை திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !