மண்டைக்காடு கோவிலில் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம்
ADDED :4266 days ago
நாகர்கோவில் : மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பெரியசக்கர தீவட்டி ஊர்வலம் நாளை 10-ம் தேதி நடக்கிறது. காலை பஞ்சாபிஷேகம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து பைங்குளம் சாஸ்தாகோவில் இருந்து சந்தனகுடம் காவடி ஊர்வலம் கோவிலுக்கு புறப்படுகிறது. பின்னர் வெள்ளி பல்லக்கில் சுவாமி பவனியும் இரணியலில் இருந்து கோவிலுக்கு யானைமீது களப பவணியும், பகல் 11 மணிக்கு சமயமாநாடும் நடைபெறுகிறது. இதன்பின்னர் பெரியசக்கர தீவட்டி அலங்கார பவனி நடக்கிறது. விழாவில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. விழாவையொட்டி 3 நாட்கள் மணவாளக்குறிச்சி, திங்கள்சந்தை, இரும்பிலி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.