உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

நாகர்கோவில் : ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியோற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 10 நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 11ம் தேதி சமய சொற்பொழிவும், 12ம் தேதி பக்தி மெல்லிசையும், 14-ம் தேதி சமயவகுப்பு மாணவிகளின் கழைநிகழ்ச்சியும் நடக்கிறது. 16-ம் தேதி சாஸ்தா குதிரை வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், நள்ளிரவில் பரி வேட்டைக்கு சாஸ்தா குதிரை வாகத்திலும், அம்பாள் கிளி மற்றும் அன்னவாகனத்திலும் பவனி வருதல் நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பச்சைமால், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பக்த சேவா சங்க நிர்வாகிகளும். விழாக்குழுவினரும் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !