ஆதியூர் ராமர் கோவிலில் விழா
ADDED :4254 days ago
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சூலக்கல் ஆதியூர் ராமர் கோவிலில், 7ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. பொள்ளாச்சி சூலக்கல் அருகேயுள்ள ஆதியூர் ராமர் கோவிலில், 7ம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 11:00 மணிக்கு மகா சுதர்சன ேஹாமமும்; மதியம் 1:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. செருவாச்சூர் மதுரகாளியம்மன் உபாசகர் சுவாமி சம்பத்குமார் தலைமையில் பூஜைகள் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது.