டவுன் மாரியம்மனுக்கு நாளை கும்பாபிஷேகம்
ADDED :4253 days ago
திருப்பூர்: திருப்பூர் அரிசிக்கடை விதியில் உ<ள்ள டவுன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை (12ம் தேதி) நடக்கிறது. நேற்று, யாக சாலை பூஜைகள் துவங்கின. காலை 5.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தன. மாலை, வாஸ்துசாந்தி, விக்னேஸ்வர பூஜை, முதற்கால யாக பூஜை உள்ளிட்டவை நடந்தன. இன்று காலை, விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜை, இரவு, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி நடக்கின்றன. நாளை காலை 7.15 மணி முதல், நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தனம், கடம் புறப்பாடு ஆகியவை நடக்கின்றன. காலை 10.15 மணிக்கு, விமான கும்பாபிஷேகம், 10.30 மணிக்கு, சுவாமிகள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மூலாலய கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.