ஜெயின் துறவிகள் காரைக்குடி வருகை
ADDED :4253 days ago
காரைக்குடி: 50 ஆயிரம் கி.மீ.,நடைபயணம் மேற்கொண்ட, ஜெயின் துறவிகள், காரைக்குடி வந்தனர். ஜெயின் துறவியாக உள்ளவர்கள், 50 ஆயிரம் கி.மீ., நடைபயணம் மேற் கொள்ள வேண்டும். அதன்படி, ஆச்சார்யா விஜய் ஹர்திக் ரத்னா சுரிஷ்வர்ஜி மராஷாப் தலைமையில், 11 ஜெயின் துறவிகள், குஜராத்திலிருந்து - ராமேஸ்வரத்துக்கு நடைபயணம் மேற்கொண்டனர். காரைக்குடிக்கு வந்த இவர்கள், மகர்நோன்பு அக்ரஹாரம் பகுதியில், ஜெயின் சங்கத்தினர் சார்பில், குஜராத் பாலித்தானாவிலிருந்து கொண்டு வரப்பட்ட, 15 அங்குல உயரமுள்ள, 20வது தீர்த்தங்கர் முனிசுப்ரதசுவாமிஜி சிலையை, ஸ்தாபனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, காரைக்குடி ஜெயின் சங்கத்தினர் செய்திருந்தனர்.