ராமேஸ்வரம் கோயிலில் நாளை பாலாலய பூஜை
ADDED :4293 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் இந்தாண்டு இறுதியில் கும்பாபிஷேகம் நடப்பதையொட்டி, நாளை பாலாலய பூஜை நடக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், சுவாமி, அம்மன், விநாயகர் சன்னதி உள்ளிட்ட 21 விமானங்கள், கிழக்கு, மேற்கு ராஜகோபுரங்களுக்கு திருப்பணி துவக்கிட, இன்று கோயிலில் பாலாலயம் பூஜை நடக்கிறது. இதற்காக, நேற்று காலை, கோயிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜை, மாலையில் முதல் கால யாக பூஜை, பூர்ணாகுதி, மகாதீபாரதனை நடந்தது. நாளை (மார்ச் 12) காலை, இரண்டாம் கால யாக பூஜை, கஜ பூஜை, கோ பூஜை, மகா தீபாராதனைக்கு பின்னர், பாலாலயம் நடைபெறும் என, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தெரிவித்தார்.