உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கோவில்களில் நாளை பங்குனி தேரோட்டம்!

சென்னை கோவில்களில் நாளை பங்குனி தேரோட்டம்!

சென்னை: திருவான்மியூர் மருந்தீசுவரர், வடசென்னையில் உள்ள, சென்ன மல்லீஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர் மற்றும் மல்லிகேஸ்வரர் கோவில்களில், நாளை, பங்குனி தேரோட்டம் நடக்கிறது. பாரிமுனை, தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னமல்லீஸ்வரர் கோவிலில், பங்குனி தேரோட்டம், நாளை, அதிகாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. அதேபோல், தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், காலை 5:00 மணிக்கும், மண்ணடி, லிங்கி செட்டி தெருவில் உள்ள மல்லீகேஸ்வரர் கோவிலில், காலை, 9:00 மணிக்கும், பங்குனி தேரோட்டம் நடக்கிறது. திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில், நாளை காலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !