செம்பை சங்கீத உற்சவம் இன்று நிறைவு!
ADDED :4337 days ago
பாலக்காடு: செம்பை பார்த்த சாரதி கோவில் ஏகாதசி திருவிழாவில் நேற்று, கடையநல்லூர் ராஜகோபால பாகவதர் தலைமையில், ராதா கல்யாணோற்சவம், டாக்டர் ஸ்ரீவத்சன் ஜெ.மேனன், கதிரி கோபால்நாத் சாக்ச போன் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. உற்சவத்தின் இறுதி நாளான இன்று காலை 8.30 மணிக்கு உஞ்சவிருத்தி பஜனை, 9.30 மணிக்கு முன்னணி கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்சரத்ன கீர்த்தனை, 10.30 மணி முதல் மண்ணூர் குமாரனுண்ணி, சுகுமாரி நரேந்திர மேனன், புவனா ராமசுப்பு, மஞ்சு ஜயவிஜயன், போள் பூவத்திங்கல் சங்கீத ஆராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு சாக்சபோன் கலைஞர் ராமநாதன், 6.30 மணிக்கு பாடகர் விஜய் ஜேசுதாஸ், 7.30 மணிக்கு ஏழுநுடுவி கோபாலகிருஷ்ணன், இரவு 8.30 மணிக்கு பாடகர் ஜேசுதாஸ், 10.30 மணிக்கு ஜெயன் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.