சவுடல் விமானத்தில் கபாலீசுவரர் வீதி உலா!
மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில், பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று, சவுடல் விமானத்தில் கபாலீசுவரர் எழுந்தருளினார். மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவிலில், பங்குனி திருவிழாவின் ஐந்தாம் நாளான, நேற்று, கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்காரவேலர் ஆகியோர் சவுடல் விமானத்தில், எழுந்தருளி நான்குமாட வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின், நள்ளிரவு 1:00 மணிக்கு, கபாலீசுவரர், கற்பகாம்பாள், சண்டேசர்கேஸ்வரர், தனித்தனியாக ரிஷப வாகனங்களிலும், விநாயகர், மூஞ்சூறு வாகனத்திலும், சிங்காரவேலர் மயில் வாகனத்திலும் எழுந்தருளி, நான்கு மாட வீதிகள் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நாளை காலை 8:00 மணிக்கு கபாலீஸ்வரர் தேருக்கு எழுந்தருள்கிறார். 9:00 மணி முதல் தேரோட்டம் நடக்கும். நாளை இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்க உள்ளது. இன்று... காலை 8:30 மணிக்கு, பல்லக்கு விழா நடைபெற்றது. இரவில், யானை வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது.