திருநாகேஸ்வரம் நாச்சியார்கோவில் கல்கருட சேவை
ADDED :4221 days ago
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநரையூர் எனப்படும் நாச்சியார்கோவிலில் சீனிவாச பெருமாள் கோவில் திருமங்கையாழ்வாரால் 100 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்டுள்ள தலமõகும்.பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சக்தி பெற்றவராக கல்கருடபகவான் இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். சிறப்புமிக்க இத்தலத்தில் பங்குனி மாத பிரமோற்சவத்தில் 4-ம் நாள் திருவிழாவாக உலகப்பிரசித்தி பெற்ற கல் கருடசேவை கோலாகலமாக நடந்தது. புறப்பாட்டின் போது கல்கருடனை தூக்கிக்கொண்டு சென்றனர். இதனை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.