திருப்பரங்குன்றத்தில் கை பார நிகழ்ச்சி!
ADDED :4422 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பங்குனி ஐந்தாம் நாள் திருவிழாவான நேற்று, கை பாரம் நிகழ்ச்சி நடந்தது. இரண்டு டன் எடை கொண்ட வெள்ளி யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள, பக்தர்கள் உள்ளங்கைகளில் தலைக்குமேல் வாகனத்தை தூக்கிச் சென்றனர். கொத்தாள முக்குமுதல் கோயில் வாசல் வரை ஓடினர். பின், பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 17ல் பங்குனி உத்திரம், 19ல் பட்டாபிஷேகம், 20ல் திருக்கல்யாணம், 21ல் தேரோட்டம், 22ல் தீர்த்த உற்சவம் நடக்கிறது.