மகாலட்சுமி குபேரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :4264 days ago
விழுப்புரம்: திருநகர் மகாலட்சுமி குபேர கோவிலில் பெருமாள் தாயாருக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.விழுப்புரம் அடுத்த திருநகரில் உள்ள மகாலட்சுமி குபேர கோவிலில் சக்கரத்தாழ்வார் சம்ப்ரோஷணம் வைபவம் கடந்த 12ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் பகவத் அனுக்கிரகம், மகா சங்கல்பம், வாஸ்து சாந்தி, கோபூஜை, விஸ்வரூபம், புண்யாகவசனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு மகா திருமஞ்சனம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மாலை மாற்றுதல் நிகழ்ச்சியுடன் மங்கள வாத்தியங்கள் முழுங்க பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.