படவேட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4263 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் படவேட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைகள் துவங்கின. கும்பாபிஷேக தினமான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோபூஜை, 3ம் கால யாகசாலை பூஜைகள், விசேஷ திரவியஹோமம், மகாபூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி 9.30 மணிக்கு மூலகலசத்திற்கு மணிகண்டன், ஸ்ரீநிவாச அய்யர் வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.விழா ஏற்பாடுகளை அரகண்டநல்லூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.