உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.51 லட்சம்

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.51 லட்சம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில், ஒரு மாதத்தில், 51.11 லட்சம் ரூபாய் பணத்தை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுடன், ரொக்கம், தங்கம், வெள்ளி என, வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கை செலுத்தி வருகின்றனர். மாதம் தோறும் காணிக்கைகள் கணக்கிடப்படுவது வழக்கம். நேற்று முன்தினம், மலைக்கோவில் வள்ளி மண்டபத்தில், கோவில் நிர்வாகிகள் முன்னிலையில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. உண்டியல் மூலம் 51.11 லட்சம் ரூபாய், 816 கிராம் தங்கம், 4.5 கிலோ வெள்ளி கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !