சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஏடு கொடுக்கும் திருவிழா:
ADDED :4566 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா எட்டாம் நாளான நேற்று சிவகாமி அம்பாளுக்கு நடராஜர் ஏடு கொடுக்கும் விழா நடந்தது.நேற்று காலை விடையாத்தி சப்பரங்களில் நடராஜர், சிவகாமி புறப்பாடாகி, வீதி உலா வந்தனர். பின் கோயிலில் திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினர். தீபாராதனைகள் முடிந்து நடராஜர் கரத்தில் இருந்த ஏடுகளை சிவாச்சாரியார்கள் பெற்று, சிவகாமி அம்பாளிடம் சேர்த்தனர்.