திருச்செந்தூர் பங்குனி உத்திர திருவிழா: இன்று திருக்கல்யாணம்!
ADDED :4264 days ago
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக்கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது. தெடர்ந்து கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமி அம்பாளுக்கு இன்று இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.