உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் நாளை தேரோட்டம்

காளையார்கோவில் : கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்கோவில் பங்குனி பெருவிழா தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. மார்ச் 11ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 18ம் தேதி இரவு அம்மன் தங்கக்குதிரை வாகனத்திலும், 19ம்தேதி காலை 9 மணியிலிருந்து 10 மணிக்குள் தேரோட்டமும்,20ம்தேதி தீர்த்தவாரியும்,மலர்பல்லக்கு அன்னதானமும், விடையாற்றி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவுபெறவுள்ளது.ஏற்பாடுகளை இந்து சமயஅறநிலையத்துறை நிர்வாகம் செய்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !