திருக்கோளநாதர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்
ADDED :4265 days ago
திருப்புத்தூர் : திருக்கோளக்குடியில், திருக்கோளநாதர்-ஆத்மநாயகி அம்பாள் கோயிலில் பவுர்ணமி கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மலையில் எழுந்தருளியுள்ள இச்சிவத்தலத்தில்,மூன்றடுக்கு கோயில்கள் உள்ளன. பூமி,அந்தரம்,சொர்க்கம் என்ற மும்மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். நேற்று முன்தினம், மாலையில் பக்தர்கள், மலையடியில் எழுந்தருளியுள்ள, கிராம தெய்வங்களை வழிபட்டு, கிரிவலத்தைத் துவக்கினர்.முடிவில், திருக்கோளநாதர்-ஆத்மாநாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையை நமச்சிவாய குருக்கள் நடத்தினார்.