ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில் பூக்குழி விழா!
ADDED :4255 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகர் அல்லிக்கண்மாய் மாரியம்மன் கோயில் பங்குனி பவுர்ணமி பூக்குழி திருவிழா மார்ச் 7ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்கு முன்தினம் இரவு 10.30 மணிக்கு பக்தர்கள் அக்னிச்சட்டியுடன் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சக்கரக்கோட்டை எம்.எஸ்.கே.சத்தியேந்திரன் நகரில் சந்தோஷ், ராஜகோபாலா, கோமதி தாயார் சன்னதியில் பவுர்ணமியை முன்னிட்டு அர்ச்சனை, சிவலிங்க பஜனை நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டு குழுவினர் செய்தனர். அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை, மாங்கல்ய பூஜைகள், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. 800க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, அழகன்குளம் அழகிய நாயகி சங்கப் பொறுப்பாளர் பிரேமா குழுவினர் செய்தனர்.