ராஜகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4257 days ago
உடுமலை : சிவசக்தி காலனியில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது. உடுமலை, தாராபுரம் ரோடு, சிவசக்தி காலனியில் அமைந்துள்ளது ராஜகாளியம்மன் கோவில். இக்கோவில் ஐந்தாம் ஆண்டு உற்சவ திருவிழா, கடந்த 4ம் தேதி கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. தினமும் காலை, மதியம், இரவு சிறப்பு பூஜைகள் நடந்ன. 11ம் தேதி திருவிழா கம்பம் நடுதலும், 16ம் தேதி இரவு முனி விரட்டுதலும், 17 ம் தேதி கும்பம் தாளித்தல் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று முன்தினம் விநாயகர் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக, மாவிளக்கு, பூவோடு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.