மாரியம்மன் கோயில் தேரோட்டம்
ADDED :4256 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் , காந்தி மைதானத்தில் உள்ள மாரியம்மன் கோவில் 87-வது குண்டம் விழ துவங்கியது. கடந்த 18-ம் தேதி காலை 8 மணிக்கு நடந்த குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு அம்மன் சுவாமி தேரில் எழுந்தருளினார். 8 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார், கோவில் செயல் அலுவலர் ராதா கிருஷ்ணன், மேலாளர் ராமராஜ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தற்காரிமண்டி உரிமையாளர்கள் தொழிலாளர்கள் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். தேர், ஊட்டி மெயின் ரோடு, நெல்லித்துறை ரோடு, காய்கறி மண்டிகள் வழியாக இரவு 9.00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது.