யானை வாகனத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பவனி!
ADDED :4256 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி, உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன் தினம் இரவு, யானை வாகனத்தில் ஏகாம்பரநாதர் பவனி வந்தார். கடந்த 7ம் தேதி ஆரம்பித்த இந்த பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம், 13 நாட்கள் நடந்தன. நேற்று முன்தினம் பிற்பகல் சர்வ தீர்த்த குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. அதனை தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு ஏகாம்பரநாதர் யானை வாகனத்தில் எழுந்தருளி பவனி வந்தார். ஏலவார்குழலி, விநாயகர், சண்டீஸ்வரர், முருகர் ஆகியோரும் தனித்தனி வாகனங்களில் வீதி உலா வந்தனர். நான்கு ராஜவீதிகளில் சுற்றி வந்து, இரவு 10:30 மணிக்கு மூங்கில் மண்டபத்தில் எழுந்து அருளினர். அங்கு ஏகாம்பரநாதரை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் இரவு 11:30 மணிக்கு, மீண்டும் கோவிலுக்கு சென்றடைந்தார்.