பொன்மலை கோவிலில் கும்பாபிஷேக விழா
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகள் நிறைவுபெற்றதை ஒட்டி ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் வேலாயுதசாமி உற்சவர் சிலைக்கு முன்பாக, கணபதி நவக்கிரக ஹோமம் செய்யப்பட்டது.
பின் வேலாயுதசாமிக்கு பகல் 12.30 மணிக்கு பால், பன்னீர்,தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் , சந்தனம், குங்குமம் , அரிசி மாவு போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின் காசி விஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டும், வேலாயுதசாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கிணத்துக்கடவு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து வேலாயுதசாமியையும் ,காசி விஸ்வநாதரையும் வழிபட்டனர்.
பின் பக்தர்களுக்கு சஷ்டி குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோபண்ண மன்றாடியார், செயல் அலுவலர் வெண்மணி,, கஷ்டி குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.