உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

பறவைக் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் சங்கர் நகரில் உள்ள, பண்ணாரி அம்மன், விநாயகர் கோவில்களின் 47ம் ஆண்டு விழா, கடந்த 3ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. கம்பம் நடுதல், அம்மன் அழைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை பஸ் ஸ்டாண்ட் அருகேவுள்ள சக்தி விநாயகர் கோவில் முன் அலகு குத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் அலகு குத்திய பக்தர்கள் பறவைக்காவடியில் தொங்கிய படி, அண்ணாஜி ரோடு, சத்தி மெயின் ரோடு வழியாக சங்கர் நகரை அடைந்து, சுவாமிக்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்பு பொங்கல் வைத்தலும், மஞ்சள் நீராட்டும் நடந்தது. 24ம் தேதி மறுபூஜையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !