உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரி குண்டம் திருவிழா: ரூ.1 கோடி உண்டியல் வசூல்!

பண்ணாரி குண்டம் திருவிழா: ரூ.1 கோடி உண்டியல் வசூல்!

சத்தியமங்கலம்: பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு, உண்டியல் வசூல், ஒரு கோடியை தாண்டியது. சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. கடந்த செவ்வாய்கிழமை, இக்கோவிலில், முக்கிய நிகழ்வான குண்டம் விழா நடந்தது. குண்டம் விழாவில், தமிழக மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே உள்ள உண்டியலுடன், புதிதாக கூடுதல் உண்டியல் வைக்கப்பட்டது. இந்த உண்டியல்கள் எண்ணும் பணி, கோவை அறநிலைத்துறை இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடந்தது. குண்டம் விழாவை முன்னிட்டு, கோவில் உண்டியல் மற்றும் அனுமதி சீட்டு உள்ளிட்ட வகையில், ஒரு கோடியே, மூன்று லட்சத்து, 13 ஆயிரத்து, 471 ரூபாய் வசூலானது. கடந்த ஆண்டை காட்டிலும், 19 லட்சம் ரூபாய் கூடுதல் வசூலாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !