உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வலங்கைமான் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்!

வலங்கைமான் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்!

கும்பகோணம்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழாவிற்கு கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திலிருந்து இரவு பகலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்ட பொதுமேலாளர் சந்திரசேகரன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வலங்கைமான் மகாமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு பாடைக்காவடி மற்றும் பல்லக்குத் திருவிழா நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு நாளை 22ம் தேதி முதல் 24 ம் தேதி வரையும், 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை இரவு பகலாக சிறப்பு பஸ்களை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் தஞ்சாவூர், நீடாமங்கலம், மன்னார்குடி, பாபநாசம், குடவாசல், கும்பகோணம் ஆகிய இடங்களிலிருந்து வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !