பெத்தி செமினார் பள்ளியில் புனித சூசையப்பர் தேர்ப்பவனி
ADDED :4253 days ago
புதுச்சேரி: பெத்தசெமினார் பள்ளியில் புனித சூசையப்படர் திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது. புதுச்சேரி, காந்தி வீதி, பெத்திசெமினார் பள்ளியில் புனித சூசையப்படர் திருவிழா கடந்த 17-ம தேதி துவங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் விழாவில், முதல் நாள் தொடக்க பள்ளியிலும், 2-ம் நாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் விழா நடந்தது. மூன்றாம் நாளான நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு மேல் நிலையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் அருள்நாதன், துணை முதல்வர் தலைமையில் ஆடமபர திருப்பலி நடந்தது. மாலை 6.00 மணிக்கு புனித சூசையப்பரின் தேர்ப்பவனி, ஜென்மராக்கினி ஆலையத்தை அடைந்ததும் நற்கருணை நடந்தது. தேர்ப்பவனியில் பள்ளி ஆசிரயர்கள், மாணவர்கள் ,, பெற்றோர் கலந்து கொண்டனர்.