திருச்செங்கோடு மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
ADDED :4253 days ago
நாமக்கல்: திருச்செங்கோடு குஞ்சுமாரியம்மன் கோயிலில் பொங்கல் பண்டிகை நடந்தது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எஸ்.என்.டி., சாலையில் குஞ்சுமாரியம்மன் கோவில், உள்ளது. இக்கோயிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.