சென்னை கந்தாஸ்ரமத்தில் வஸந்த நவராத்திரி விழா!
சென்னை: கந்தாஸ்ரமத்தில் வஸந்த நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் வரும் 31ம் தேதி முதல் ஏப். 09ம் தேதி வரை பிரத்யங்கிரா தேவி மூலமந்த்ர மங்கள சண்டி மஹாயக்ஞம் செய்யப்பட்டு. வெகு விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சாரதா நவராத்திரியின் போது ஸ்ரீ மாதா புவநேஸ்வரியை ஸ்ரீதுர்கா, ஸ்ரீலஷ்மி, ஸ்ரீசரஸ்வதி ரூபமாக கொண்டாடுவதைப்போல் ஸ்ரீவஸந்த் நவராத்திரியில் பிரத்யங்கிரா தேவியை, ஸ்ரீ அதர்வண பத்ரகாளி ப்ரத்யங்கிரா, ஸ்ரீபிராஹ்மி ப்ரத்யங்கிரா, ஸ்ரீநாரயணீ ப்ரத்யங்கிரா, ஸ்ரீரௌத்ரி ப்ரத்யங்கிரா, ஸ்ரீஉக்ர கிருதியா ப்ரத்யங்கிரா, ஸ்ரீகாளராத்ரி ப்ரத்யங்கிரா, ஸ்ரீகோர ப்ரத்யங்கிரா, ஸ்ரீபத்ர ப்ரத்யங்கிரா, ஸ்ரீஸெளபாக்ய ப்ரத்யங்கிரா என ஒன்பது விதமாக துதித்துக் கொண்டாடகிறது. அதன்படி ஆஸ்ரமத்தில் கொலுவீற்றிருக்கும் பிரத்யங்கிரா தேவிக்கு, வஸந்த் நவராத்திரியின் போது பிரதி தினமும் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் மிகச்சிறப்பான பலன்களை தரும், மேற்கூறிய ஒன்பது தேவிகளின் மூல மந்திரங்களைக் கொண்டு விஷே ஹோமங்கள் செய்யப்படுகிறது.