புதுச்சேரி சனீஸ்வர பகவான் கோயிலில்.. கணபதிக்கு 1008 லட்டு படையல்!
ADDED :4253 days ago
புதுச்சேரி: புதுச்சேரி சனீஸ்வர பகவான் கோயிலில் கணபதிக்கு 1008 லட்டு படையல் விழா நடந்தது. புதுச்சேரி மொரட்டாண்டியில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலில் சங்கடஹர சதூர்த்தி விழாவை முன்னிட்டு கோயில் உள்ள ஸ்வர்ண மகா கணபதிக்கு 1008 லட்டு படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.