கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :4249 days ago
கூடலூர்:நீலகிரி மாவட்டம் கூடலூர் சக்தி விநாயகர் கோவிலில் சங்கடகர சதூர்த் தியை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு 108 சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு வேதமந்திரங் கள் முழங்க பூஜிக்கப்பட்டது. பின்னர் ஹோமங்கள் நடை பெற்றது. இதனை தொடர்ந்து சிவசங்கர பாண்டியன் பட்டர் தலைமையிலான அர்ச்சகர்கள் சக்தி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்களை நடத்தினர். தொடர்ந்து அலங்கரிக்கப் பட்ட பல்லக்கில் சக்தி விநா யகர் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.