அதியமான்கோட்டைகாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை!
ADDED :4233 days ago
தர்மபுரி: தர்மபுரியை அடுத்த அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி மாதந்திர விழா நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று காலை, 6 மணிக்கு காலபைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், குபேர யாகம், அதிருந்ர யாகம் நடந்தது. தொடர்ந்து, ராஜஅலங்காரமும், தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தது. மேலும், இரவு, 10 மணி முதல், 12 மணி வரை குருதி யாகம் நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.