அமர்நாத் யாத்திரை: ஹெலிகாப்டர் முன்பதிவு 27ல் தொடக்கம்!
ADDED :4233 days ago
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள அமர்நாத் கோவில் யாத்திரைக்கு இம் மாதம் 27ஆம் தேதி முதல் ஹெலிகாப்டர் பயண முன்பதிவு துவக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரியத்தின் தலைமை நிர்வாக அலுவலர் நவீன் சௌத்ரி கூறுகையி்ல்,அமர்நாத் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் முன்பதிவு பயணச்சீட்டு வழங்கும் பணி இந்த மாதம் 27ஆம் தேதி முதல் துவக்கப்பட உள்ளது. இதற்கான சேவையை பவன் ஹன்ஸ், குளோபல் வெக்ட்ரா மற்றும் ஹிமாலயன் ஹெலி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் வழங்க உள்ளன. யாத்திரை, ஜூன் 28ல் துவங்கும்.