ஸ்ரீவி ஆண்டாள் கோயிலில்.. திறக்கப்படாத பொருள் பாதுகாப்பு அறை!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், பொருள்கள் பாதுகாக்கும் அறையின், வேலைகள் முடிந்து, ஒரு மாதமாகியும், திறக்கப்படாமல் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. கோயில் வரும் பக்தர்கள், பல்வேறு சோதனைகளுக்கு பின், அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக, ஆண்டாள் கோயில், வடபத்ரசாயி கோயில்களின் நுழைவு வாயிலில்,மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. 42 கோமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோயில் வரும் பக்தர்கள்,தங்களுடன் கொண்டு வரும் பொருட்களை பாதுகாக்க அறை இல்லை. இதையடுத்து, ஆடிப்பூர மண்டபத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன், மூன்று லட்சம் ரூபாய் செலவில், அறை தயார் செய்யும் பணி நடந்தது. வேலைகள் முடிந்து, ஒரு மாதத்திற்கு மேலாகியும், இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இதை, செயல்பாட்டிற்கு கொண்டு வர,கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் செயல்அலுவலர் ராமராஜ், பொருட்கள் பாதுகாப்பு அறை பணி, தற்போது தான் முடிந்துள்ளது. விரைவில் திறந்து, பக்தர்கள் பயன்பாட்டிற்கு விடப்படும், என்றார்.