உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மூல மந்திர ஹோமம்!

திருவள்ளூர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மூல மந்திர ஹோமம்!

திருவள்ளூர்: விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், மூல மந்திர ஹோமம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, காக்களூர் தேவி மீனாட்சி நகரில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உற்சவருக்கு, கடந்த 19ம் தேதி, கருட சகஸ்ரநாமம், 20ம் தேதி, நரசிம்மர் சகஸ்ர நாமம் நடைபெற்றது. கடந்த 23ம் தேதி, வராகர் சகஸ்ரநாமமும், நேற்று முன்தினம், காலை 8:30 மணி முதல் 11:30 மணி வரை, மூல மந்தர ஹோமமும், மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை, சகஸ்ரநாமமும் நடைபெற்றது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த, திரளான பக்தர்கள் ஹோம நிகழ்ச்சியில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !