உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு பாலபிஷேகம்!

ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு சிறப்பு பாலபிஷேகம்!

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டத்தில், திருத்துறைப்பூண்டியில், ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்வாமி கோவிலில் வைராக்கிய விஸ்வரூப ஆஞ்சநேயர் 21ம் ஆண்டு பிரதிஷ்டை பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதில், காலை 11 மணிக்கு ஸ்ரீ ராமர் மடத்தில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டு, சிறப்பு ஹோமம் நடந்தது. வைராக்கிய ஆஞ்சநேய ஸ்வாமிக்கும், 16 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயருக்கும் சிறப்பு பாலபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, யாக கலச அபிஷேமும், மதியம் 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் ரவி, தக்கார் ராஜாங்கம் மற்றும் வைராக்கிய ஆஞ்சநேயர் வார அன்னதானக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்குமார் உள்பட அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !