துலுக்கான மாரியம்மன் கோவிலில் புதிய தேர் செய்யும் பணி தீவிரம்!
ADDED :4230 days ago
திருபுவனை: மதகடிப்பட்டுபாளையம் துலுக்கான மாரியம்மன் கோவில், புதிய தேரின் அலங்கார மேல் வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மதகடிப்பட்டுபாளையம் கிராமத்தில் உள்ள துலுக்கான மாரியம்மன் கோவிலில் 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய தேர் செய்யும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர் வெள்ளோட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து தேரின் அலங்கார மேல் வேலை துவங்கியது. தற்போது, அலங்கார வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.