ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா!
ADDED :4225 days ago
ஆலங்குடி: தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 98வது தலமான, குரு பரிகார ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா வரும் ஜூன் 13ம் தேதி முதல் நடக்கிறது. நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக விளங்கும் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு குருபெயர்ச்சி வரும் ஜூன் மாதம் 13ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. குருபகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு பிரவேசம் செய்கிறார். இதனை முன்னிட்டு குருபகவானுக்கு லட்சார்ச்சனை வரும் மே 28ம் தேதி தொடங்கி ஜூன் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. மீண்டும் குருபெயர்ச்சிக்கு பின்னர் ஜூன்.16ல் தொடங்கி ஜூன் 22ம்தேதி வரை நடைபெற உள்ளது.