/
கோயில்கள் செய்திகள் / தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் விழா துவக்கம்!
தாயமங்கலம் முத்துமாரியம்மன் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் விழா துவக்கம்!
ADDED :4214 days ago
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நேற்று முன் தினம் இரவு 11 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியார் , முன்னாள் ஊராட்சி தலைவர் அய்யாச்சாமி , ஊராட்சி தலைவர்கள் வசந்தா , சேகர் , மலைக்கண்ணு , வி.ஏ.ஓ., க்கள் அங்குச்சாமி , அழகர்சாமி , நாகலிங்கம் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.தினமும் இரவு 10 மணிக்கு அம்மன் சிம்மம் , காமதேனு , அன்னம் , குதிரை வாகனங்களில் வீதி உலா வருவார் . முக்கிய திருவிழாவான பொங்கல் விழா ஏப்.5ல் காலை 6 மணி , மறுநாள் இரவு 7 மணிக்கு தேரோட்டம் , ஏப்,7ல் காலை 7.20 மணிக்கு பால்குடம் , மாலை 6 மணிக்கு ஊஞ்சல், இரவு 10 மணிக்கு புஷ்ப பல்லக்கு நடக்கிறது. ஏப், 8ல் இரவு 8 மணிக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்தவாரியுடன் கொடியிறக்கப்பட்டு திருவிழா நிறைவடைகிறது.