சென்னிமலை பங்குனி திருவிழா ஏப்.11ல் துவக்கம்!
ADDED :4216 days ago
சென்னிமலை: முருகன் கோவில் பங்குனி உத்திரத்திருவிழா ஏப்.11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இக்கோயிலில் பங்குனிதேரோட்டம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏப்.10ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. 11ம் தேதி கொடியேற்றமும், 12ம் தேதி இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.