உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்: ஏப்.,6ல் பொங்கல்!

விருதுநகர் மாரியம்மன் கோயில் கொடியேற்றம்: ஏப்.,6ல் பொங்கல்!

விருதுநகர் : விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், பங்குனி பொங்கல் விழாவையொட்டி, நேற்று இரவு 9.01 மணிக்கு கொடி ஏற்றப்பட்டது. இதன் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, ஏப்., 6 ல் நடக்கிறது.தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. கொடி ஏற்று விழாவிற்கு, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள், தங்களது ஒரு வார நேர்த்தி கடனை செலுத்துவதற்கு வந்தனர். ஏப்., 6 பொங்கல், ஏப்., 7 கயிறு குத்துதல், அக்னி சட்டி, நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 8 ல் வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 10ல், அம்மன் நகர் வலம் வந்து, மஞ்சள் நீராட, மாலை 4 மணிக்கு கொடி இறக்கப்படுகிறது. ஏற்பாடுகளை, விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தான நிர்வாக தலைவர் ராஜ்மோகன், செயலாளர் சுப்பிரமணியன், உப தலைவர் தனசேகரன், பொருளாளர் கனகவேல், காரியதரிசி ஜெகதீசன் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !