காரைக்கால் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்திற்கு சிறப்பு பூஜை!
ADDED :4213 days ago
காரைக்கால்: திருப்பட்டினம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலில் புதிய சேஷ வாகனத்திற்கு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. காரைக்கால் மாவட்டம், திருபட்டினத்தில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உற்சவ காலங்களில் பெருமாள் வீதியுலா செல்லும் வகையில் திருப்பட்டினத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர், 80 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக சேஷ வாகனம் செய்து அளித்துள்ளார். இந்த வாகனத்திற்கு நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.