திருமூர்த்தி மலை கோவிலில் அமாவாசை வழிபாடு
ADDED :4213 days ago
உடுமலை: திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். உடுமலை அருகே பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும், திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பண்டிகை, விடுமுறை நாட்களில் உடுமலை சுற்றுப்பகுதியிலகள் மட்டுமல்லாது பிற பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அமாவாசையை முன்னிட்டு, நேற்று அதிகாலை, அமணலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.