அமெரிக்காவில் ஹோலி திருவிழா!
ADDED :4258 days ago
அமெரிக்காவில், கடந்த வாரம், கொண்டாடப்பட்ட ஹோலி விழாவில், 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். அமெரிக்காவின், யூட்டா மாகாணத்தில் வசிக்கும் இந்தியர்கள் சார்பாக, கடந்த இரண்டு நாட்களாக ஹோலி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்பேனிஷ் போர்க் நகரில் உள்ள, ராதா கிருஷ்ணா கோவிலில், ஹோலி விழாவையொட்டி, இசை,நடனம் மற்றும் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. "ஹரோ ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சார்பில், ஹோலி ஊர்வலம் நடந்தது. இதில், 70 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்று, ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடி தூவி மகிழ்ந்தனர். இந்துக்கள் மட்டுமல்லாது, பல்வேறு மதத்தினரும், இவ்விழாவில் பங்கேற்றனர்.